அவசரமாக கூடிய விசேட அமைச்சரவை கூட்டம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அரச தலைவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அரச தலைவரிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச , சமல் ராஜபக்ச, ஷசிந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

