இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி : ஜூலி சங் உறுதி

Anura Kumara Dissanayaka Joe Biden United States of America Julie Chung
By Sathangani Oct 08, 2024 10:15 AM GMT
Report

இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயார் என அமெரிக்கா (USA) உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

ஜோ பைடனின் வாழ்த்துச் செய்தி

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி : ஜூலி சங் உறுதி | Us Aid To Sri Lanka S Economic Development Julie

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (USAID) ஊடாக நிதி உதவிகளை வழங்கத் தயாரெனவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.

ரணில் அரசாங்கத்தின் பல திட்டங்கள் அநுர அரசாங்கத்தில் ரத்து

ரணில் அரசாங்கத்தின் பல திட்டங்கள் அநுர அரசாங்கத்தில் ரத்து

சந்திப்பில் கலந்துகொண்டோர்

சிறந்த அரச நிர்வாகத்திற்காக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்குவதோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி : ஜூலி சங் உறுதி | Us Aid To Sri Lanka S Economic Development Julie

மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் கிராமங்களின் வறுமையை ஒழிப்பதற்காக புதிய ஜனாதிபதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டார்.

தற்போது செயற்படுத்தப்படும் கிராமிய பாடசாலைகளின் பகல் உணவு வேலைத்திட்டத்தை நகர பாடசாலைகளிலும் வழங்க உதவிகளை வழங்கவிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஜஸ்டின் டிவென்ஷோ (Justin Divenanzo) மற்றும் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோபர் குஷ் (Christopher Gooch) உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஓய்வூதியதாரர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி : முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி : முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016