அமெரிக்காவின் முக்கிய தூதுவர் இலங்கை வருகிறார்
அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியேல் சி.ஃபிக் (Nathaniel C. Fick) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருகை தரும் அவர் அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்

இணைய பாதுகாப்பு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் சுதந்திரம் என்பன தொடர்பில் கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நடைபெறும் G -20 டிஜிட்டல் பொருளாதார கூட்டத்தில் அமெரிக்க தலைமை பிரதிநிதியாக கலந்துகொள்வதற்காக இன்று அவர் இந்தியா செல்கின்றார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார் அதன் பின்னர் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரும் அவர் 23 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.