சிறீதரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இரவு (23) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.சிறீதரன் (S. Shritharan), ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
யாழிற்கு விஜயம்
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனையும் (Nagalingam Vedanayagam) நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது, வட மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |