தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொள்ளும் புதிய அமெரிக்க தூதுவர்
Julie Chung
US Ambassador
Tamil Language
Ambassador Julie Chung
By Chanakyan
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி ச்சுங் (Julie Chung) இலங்கை மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அவர் கற்றுக்கொள்ளும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரக உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அந்தப்பதிவில்,
புதிய மொழிகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும், தமிழ் சிங்கள மொழிகளை கற்றுக் கொள்வதன் மூலம் தொடர்பாடல் தேவை மட்டும் பூர்த்தியாகப் போவதில்லை.
மேலும், இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரம் பற்றியும் பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ள இந்த மொழி கற்கை உதவும்.
எதிர்வரும் காலங்களில் தமது உச்சரிப்பு சரியாகிவிடும் என நம்புவதாக அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்