அமெரிக்க தூதர் யூலிசங் ஐ.பி.சி குழுமத்தலைவர் பாஸ்கரனுடன் சந்திப்பு(படங்கள்)
கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று விஜயம் செய்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் இன்று இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
கந்தையா பாஸ்கரனுடன் கலந்துரையாடல்
இந்த விஜயத்தின் போது ஐ.பி.சி தமிழ், லங்காசிறி குழுமத்தின் தலைவரும், புலம்பெயர் தமிழ் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட குழுவினர் , றீ(ச்)ஷாவில் தங்கியிருந்து நாளைய தினம் மன்னாருக்கும் செல்லவுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, சுற்றுலாப் பயணிகளாக வரும் வெளிநாட்டவர்களையும் பெரும்பாலும் ஈர்த்துள்ள சுற்றுலாத்தலமான மாறியுள்ள றீ(ச்)ஷா பண்ணையானது அனைவரினதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேவேளை, இன்று கிளிநொச்சியில் பலதரப்பட்ட ஏற்றுமதி வர்த்தக முயற்சிகளில் செழித்து வரும் பெண் தொழில்முனைவோரை தாம் சந்தித்தாக ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமது தொழில் முயற்சி வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டதுடன், அமெரிக்காவின் உதவியுடன் அவர்கள் பெற்ற வளர்ச்சி மற்றும் பொருளாதார செழிப்பு பற்றிய கதைகளையும் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் உதவியுடன் உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் தொழில் முயற்சியையும் ஜுலி சங் பார்வையிட்டுள்ளார்.
அந்த வகையில் பெண்களை பெரும்பான்மையாக கொண்ட மிளகாய் மற்றும் பொதி செய்யும் நிறுவனத்திற்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் நேரடியாக விஜயம் செய்திருந்தார்.










புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 23 மணி நேரம் முன்
