இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன் - புதிய அமெரிக்கத் தூதுவர்
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் நேற்று இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
"இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென்னை (Antony Blinken) சந்தித்திருந்தேன்.
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் நான் பெருமை கொள்வதாக, இராஜாங்க செயலாளரிடம் கூறியிருந்தேன்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், இரு தரப்புகளுக்கிடையே பகிரப்பட்ட மதிப்புகளை ஆராயவும், உறவுகளை பலப்படுத்தவும் ஆவலாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
I met with @SecBlinken before boarding the plane to Colombo. As I told him, I am truly honored to be the next US Ambassador to ?? & I look forward to working with the GoSL, civil society & people like you to build our economies, explore our shared values & strengthen ?? ?? ties. pic.twitter.com/3Ce4wvbCPx
— Ambassador Julie Chung (@USAmbSL) February 17, 2022
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)