முற்றுகிறது முறுகல் : கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டதால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது.
அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா மீது அமெரிக்க அரசு 50% இறக்குமதி வரியை விதித்துள்ளதுடன், கனடாவின் வர்த்தக முறைகேடுகள் குறித்த அறிக்கையையும் வெளியிட்டது.
தடை உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது எதிர் வரி விதிப்பதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கனடா பிரதமரின் அறிவிப்பு
இந்த இறக்குமதித் தடைகள் வரும் செப்டம்பர் 29ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. பால் மற்றும் மோட்டார் சைக்கிள் தடைகள் தவிர, கனடாவின் புகழ்பெற்ற சீஸ் வகைகளுக்கு 50% மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் (Trade War) காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, கனடா தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படும் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |