ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் கோரிக்கைக்கு பிரிட்டன் பிரதமர் பச்சைக்கொடி
Donald Trump
United Kingdom
Keir Starmer
Iran-Israel War
By Sumithiran
ஈரானுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல்களுக்கு தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
"ஈரான் பிராந்தியம் முழுவதும் ஏவுகணைகளை ஏவுவதையும், அப்பாவி பொதுமக்களைக் கொல்வதையும், பிரிட்டிஷ் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதையும், இதில் ஈடுபடாத நாடுகளைத் தாக்குவதையும் தடுக்க இந்த கோரிக்கையை ஏற்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று அவர் X இல் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் கூறினார்.
முன்பு அனுமதிக்கவில்லை
ஈரான் மீது தாக்குதல் நடத்த இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவை ஸ்டார்மர் முன்பு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
My update on the situation in the Middle East. pic.twitter.com/DvsOVcTDMy
— Keir Starmer (@Keir_Starmer) March 1, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |