இலங்கை இராணுவம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல் (படங்கள்)

Sri Lanka Army Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples United States of America
By Kiruththikan May 11, 2022 07:51 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இலங்கை
Report

இலங்கையில் திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இராணுவம் அனுப்பப்பட்டமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

அமைதியான எதிர்ப்பாளர்கள் இராணுவப் படை பிரிவுகளின் தரப்பில் வன்முறை அல்லது மிரட்டலுக்கு ஆளாகக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.

“இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறோம்,'' என்றார்

இலங்கை இராணுவம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல் (படங்கள்) | Us Concerned Over Sri Lanka Military Deployment

வன்முறைச் செயல்களைத் தூண்டும் மற்றும் ஈடுபடும் எவரையும் முழு விசாரணை செய்யவும், கைது செய்து வழக்குத் தொடர அமெரிக்கா அழைப்பு விடுக்கிறது என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இலங்கை இராணுவம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல் (படங்கள்) | Us Concerned Over Sri Lanka Military Deployment

"நாங்கள் துருப்புக்களின் நிலைப்பாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. பிரதமரின் ராஜினாமாவுக்குப் பிறகு இலங்கையில் நிலவும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றங்களையும் நாங்கள் பின்பற்றுகிறோம், ”என்று அவர் கூறினார்.

நெட் பிரைஸ் மேலும் கூறுகையில், இலங்கையில் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தீர்வுகளை கண்டறிந்து அமுல்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கங்களையும் அரசியல் தலைவர்களையும் துரிதமாக செயற்படுமாறு அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது.

மின்சாரம், உணவு, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தி மற்றும் நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்த அவர்களின் கவலைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்க ஆதரவாளர்களைக் குறிவைத்து பரவலான தீவைப்பு மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த, மக்கள் அல்லது சொத்துக்களுக்கு காயம் ஏற்படுத்தும் எவரையும் சுடுமாறு பாதுகாப்புப் படையினருக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டதையடுத்து, செவ்வாயன்று நடைபெற்ற செய்தி மாநாட்டின் போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்வாறு கவலை தெரிவித்ததுள்ளது.

Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025