அச்சத்தில் உலகம் - ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா கடும் அழுத்தம்
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளன.
தெஹ்ரானின் உள்ளே காணப்படும் அதிகாரப் போட்டிகள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையும் அதைக் கடைப்பிடிப்பதையும் கடினமாக்கியுள்ளதாகவும் இவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
ட்ரம்பைக் கொலை செய்ய சதி
ஈரானுடனான தற்போதைய நிலைமையை செய்தியாளர்களிடம் விவரிப்பதற்காக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை சீர்குலைக்க முயன்ற ஈரானிய கடும்போக்காளர்கள் காரணமாகவே இந்த வாரம் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், ஒருவேளை ஈரான் தன்னைபடுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |