அழிக்கப்பட்ட F-35 போர் விமானங்கள்! ஈரானின் அறிவிப்பை முற்றாக மறுத்தது அமெரிக்கா
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் F-35 போர் விமானங்கள் உட்பட பல அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை அமெரிக்க இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM), சமீபத்திய தாக்குதல் முயற்சிகளில் அமெரிக்க விமானங்கள் எதுவும் அழிக்கப்படவோ அல்லது சேதமடையவோ இல்லை எனத் தெரிவித்துள்ளது.
யோர்தானில் உள்ள அல்-அஸ்ராக் விமானப் தளத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எஃப்-35 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், மேலும் மூன்று விமானங்கள் சேதமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.
இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகள்
அத்துடன், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் அறிவித்திருந்தது.
Over the past few hours, Iranian state media have continued to report false claims by the Islamic Revolutionary Guard Corps (IRGC) – three in particular.
— U.S. Central Command (@CENTCOM) July 30, 2026
🚫 FIRST CLAIM: The IRGC (again) claims free and open routes through the Strait of Hormuz are dangerous for commercial… pic.twitter.com/J34ILmDvyk
இந்நிலையில், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு இலக்குகளை அடையத் தவறிவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரானில் இருந்து யோர்தான் நோக்கி ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக யோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |