முக்கிய நாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்காவின் மிகப்பெரிய சன்மானம்
வெனிசுலா (Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolás Maduro) கைது செய்வதற்கான சன்மானத்தை டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அரசு இரட்டிப்பாக்கி 415 கோடி ரூபாயாக அறிவித்துள்ளது.
வெனிசுலா மூன்றாவது ஜனாதிபதியான நிகோலஸ் மதுரோ, உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.
அவருக்கு எதிராக மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பரிசுத்தொகை
அப்போது, நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய உதவுவோருக்கு, 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
பின்னர், ஜோ பைடன் அரசு அந்தத் தொகையை 200 கோடி ரூபாயாக உயர்த்திய நிலையில், இந்தத் தொகையானது இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும்.

இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ பதவியில் நீடித்து வருகின்றார்.
இந்தநிலையில், தற்போது மதுரோவை கைது செய்வதற்கான சன்மானத்தை ட்ரம்ப் அரசு இரட்டிப்பாக்கி 415 கோடி ரூபாயாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 4 மணி நேரம் முன்