அமெரிக்காவிற்கு அடிபணிந்தாரா புடின் - ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு
உக்ரைனுடன் (Ukraine) அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) நேற்று (20) தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தத்திற்கு செல்லா விட்டால் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்து ரஷ்யாவை தனிமைப்படுத்தப்படும் என எச்சரித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எவ்வித மாற்றமும் இல்லை
செய்தித் தொடா்பாளா் மேலும் தெரிவிக்கையில், ‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியைக் கடைப்பிடித்து விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே தனது விருப்பம் என ஜனாதிபதி விளாதிமீா் புடின் பலமுறை தெரிவித்துவிட்டார்.
இதை அவ்வளவு எளிதில் கையாள முடியாது. கடுமையான முயற்சிகள் மற்றும் நீண்ட நடைமுறையின் மூலமே நிறைவேற்ற முடியும். உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராகவுள்ளது.
ஆனால், ரஷ்யா நிர்ணயித்த இலக்குகளை அடையாமல் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இதேவேளை உக்ரைனுடனான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
