இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட ஆவணம்..!
சிறிலங்கா அரசியலின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் ஒன்றை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
1948ம் ஆண்டு அமெரிக்க அதிபராக செயற்பட்ட ட்ரூமன் அந்நாட்களில் சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தை, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், இந்த கடிதம் எங்கள் காப்பகங்களில் உள்ள விரும்பப்படும் ஆவணங்களில் ஒன்று என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர உறவு
"உங்களில் சிலர் சரியாக யூகித்துள்ளபடி இது அப்போதைய இலங்கையை சுதந்திர நாடாக அங்கீகரித்து 1948 இல் அதிபர் ஹரி எஸ்.ட்ரூமன் சிறிலங்காவின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவுக்கு அனுப்பிய கடிதமாகும்.
இலங்கையுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கான,வலுவான பாதுகாப்பான இந்தோ பசுபிக்கில் இலங்கையின் சகா என்று பகிர்ந்துகொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளின் போது ட்ருமனின் வார்த்தைகளை பின்பற்றுகின்றோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது
