அமெரிக்க போர் விமானம் மீது ஈரான் தாக்குதல் : அவசரமாக தரையிறக்கம்
ஈரான் மீது ஒரு போர் நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு, அமெரிக்காவின் F-35 ரகப் போர் விமானம் ஒன்று மத்திய கிழக்கில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க நிர்பந்திக்கப்பட்டது என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்த விமானத்தைத் தாங்கள் குறிவைத்ததாகவும், அது "கடுமையாகச் சேதமடைந்தது" என்றும் ஈரான் கூறுவதாக, அந்நாட்டின் ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க வலுவான வாய்ப்பு
அந்த விமானத்தின் "நிலைமை தெரியவில்லை, அது விசாரணையில் உள்ளது" என்றும், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க வலுவான வாய்ப்பு இருப்பதாகவும் ஐஆர்ஐபி கூறுகிறது.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், விமானி சீரான நிலையில் இருப்பதாகவும், இந்தச் சம்பவம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சென்ட்காம் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |