கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக பெருந்தொகை நிதியுதவி கொடுத்த அமெரிக்கா

Port of Colombo United States of America Sri Lanka Ports Authority
By Pavi Oct 16, 2026 10:44 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அமெரிக்கா 17 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியைத் தொடர்ந்து, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மேயர் இன்று (16.10.2026) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.

முதலில் துறைமுகத்தின் கப்பல் வழிகாட்டல் மையத்திற்கு விஜயம் செய்த தூதுவரை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து, எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்த விசாரணை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்த விசாரணை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார நிலைமை

இதன்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், அமெரிக்கத் தொழில்நுட்பத்தை கொழும்பு துறைமுகத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சரக்குக் கையாளல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கவும், இரு நாடுகளினதும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும் எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக பெருந்தொகை நிதியுதவி கொடுத்த அமெரிக்கா | Us Financial Assistance Development Colombo Port

மேலும், துறைமுகத்தைப் பார்வையிட்டதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தைத் தடையின்றித் தொடர்ந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை மேலும் புரிந்துகொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிதியுதவிக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் நன்றியைத் தெரிவித்த அமைச்சர் அனுர கருணாதிலக்க, இந்த நிதியை கடல்சார் ஒற்றைச் சாளர முறைமை மற்றும் துறைமுகச் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் துறைமுகச் சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் 90 இலட்சம் கொள்கலன்களைக் கையாள எதிர்பார்ப்பதாகத் துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க தெரிவித்தார்.

அவற்றில் சுமார் 80 சதவீதமானவை மறுபரிமாற்றக் கொள்கலன்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மறுபரிமாற்றக் கொள்கலன்களைக் கையாள்வதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்திற்கு கொழும்பு துறைமுகம் வழங்கும் பங்களிப்பின் பெறுமதி 250 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், துறைமுகச் செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்காவிட்டால் அநுர பதவி விலக வேண்டும் : எச்சரிக்கும் கஸ்ஸப தேரர்!

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்காவிட்டால் அநுர பதவி விலக வேண்டும் : எச்சரிக்கும் கஸ்ஸப தேரர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016