கனடாவின் எரிபொருள் தேவையில்லை : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
கனடாவின் (Canada) எரிபொருள் தேவையில்லை என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் (Switzerland) நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் காணொளி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு மற்றும் வாகனங்கள் போன்ற எதுவுமே தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மிகுந்த சவால்
கனடாவுடன் செயல்படுவது மிகுந்த சவால் மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களது கார்களை கனடியர்கள் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த அவர் கனடாவை விடவும் உலகில் ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவிடம் கூடுதல் எண்ணிக்கையில் எரிபொருட்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
25 வீத வரியிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அமெரிக்காவுடன் கனடா இணைந்து கொள்ள வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு செய்யத் தவறினால் வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |