முடங்கியது அமெரிக்க அரசு! வெளியான அறிவிப்பு
அமெரிக்காவில் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அரசு செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் குடியரசுக் கட்சி, தற்போதைய நிதி திட்டத்தை மேலும் ஏழு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
எச்சரிக்கை
ஆனால் ஜனநாயகக் கட்சி சில நிபந்தனைகள் ஏற்கப்படாமல் இருப்பதால் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நிதி பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முடியாமல் அரசு சட்டப்படி செலவுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலை காரணமாக அரசின் பல துறைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படவிருக்கின்றன. குறிப்பாக சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கும் இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரிலும் இதே போன்ற பிரச்சினையால் அரசு சுமார் 35 நாட்கள் முடக்கப்பட்டிருந்தது.
தூதரகத்தின் பணிகள்
மேலும், இந்த முடக்க நிலை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பணிகளையும் பாதித்துள்ளது. தூதரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வழமையான புதுப்பிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Because of the lapse in appropriations, this X account will not be updated regularly until full operations resume, with the exception of urgent safety and security information.
— U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) October 1, 2025
At this time, scheduled passport and visa services in the United States and at U.S. Embassies and… pic.twitter.com/1VVdEEvcBQ
இந்த பின்னணியில், அவசியமான பாதுகாப்பு தொடர்பான தகவல்களுக்காக மட்டுமே கணக்கு இயக்கப்படும் என கூறப்படுகிறது.
எனினும், விசா மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள் வழக்கம்போல தொடரும் என தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
