அமெரிக்க விசாவிற்காக காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்! வெளியாகிய முக்கிய அறிவித்தல்
விசா
2024ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் (US Diversity Visa Program) இன்று முதல் விண்ணப்பத்திற்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரீன் கார்ட் பொதுவாக கிரீன் கார்ட் (Green Card) என அறியப்படும் பன்முகத்தன்மை விசா திட்டமானது இன்று இரவு 09.30 மணி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இந்த விடயத்தை டுவிட்ட பதிவொன்றில் தெரிவித்துள்ளது.
#DV2024 Diversity Visa Program is open from Oct 5 (9:30 PM Sri Lankan time) to Nov 8, 2022 (10:30 PM Sri Lankan time). https://t.co/nelIqX6nqV is the ONLY way to enter and all processing is electronic. No paper entries allowed. #ConsularWednesday pic.twitter.com/2zQikmlg51
— U.S. Embassy Colombo (@USEmbSL) October 5, 2022
அத்துடன் இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்கலாம்.
நிரந்தர குடியுரிமை
பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் ஒவ்வொரு வருடமும் எழுந்தமானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
எனினும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அதிகளவில் புலம்பெயர்ந்தோரை அனுப்பாத நாடுகளில் இருந்து மட்டுமே இவர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
