அமெரிக்கா - ஈரானும் போர் நிறுத்த விவகாரத்தில் தீர்க்கப்படாத முட்டுக்கட்டை!
போர் குறித்த உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பு, அமெரிக்காவும் ஈரானும் இன்னும் பல முட்டுக்கட்டைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம், போர் நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீட்டிப்பதுடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளையும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
ட்ரம்ப் மற்றும் ஈரான் தலைமையின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவோ அல்லது உறுதிப்படுத்தப்படவோ இல்லை என்று ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பேசிய வேன்ஸ், “பேச்சுவார்த்தையாளர்கள் வளமூட்டல் கேள்வி உட்பட, சில மொழி சார்ந்த விடயங்களில் முன்னும் பின்னுமாகப் பேசிக்கொண்டிருக்கின்றது.
நாங்கள் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. ஆனால் மிக அருகில் இருக்கிறோம், மேலும் அதற்காகத் தொடர்ந்து உழைப்போம்.
கோட்பாட்டளவில் அணு ஆயுதங்களை உருவாக்கப் பயன்படக்கூடிய, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதை நிறுத்துமாறும், தற்போது கையிருப்பில் உள்ள அதனை அப்புறப்படுத்துமாறும் ஈரானிடம் அமெரிக்கா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
அத்தோடு, ஈரானியர்கள் நன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமெரிக்கா நம்புகிறது” என கூறியுள்ளார்.