ஈரான் தலைமையை சாய்க்க முடியாத அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்! ட்ரம்ப் -க்கு பெரும் சவால்
ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய இரண்டு வார அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் கூட அந்நாட்டின் தலைமையை உடைக்கமுடியவில்லை என அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டடியுள்ளது.
பெப்ரவரி 28 முதல் மேற்கொண்ட தாக்குதல்களால் கூட அதன் கட்டமைப்பு சரிவு அபாயத்தில் இல்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டுகிறது.
ஏராளமான அறிக்கைகள், ஆட்சி பொதுமக்கள் மீது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதையும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் இடைக்காலத் தலைவர்கள் நாட்டிற்குள் தொடர்ந்து அதிகாரத்தைப் பயன்படுத்துவதையும் காட்டுகின்றன.
தரைவழித் தாக்குதல்
தரைவழித் தாக்குதல் இல்லாமல் ஈரானின் மத சார்பு அரசாங்கத்தை இந்தப் பிரச்சாரம் கவிழ்க்கும் என்பதில் எந்த உறுதியும் இல்லை என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் அரசியல் அழுத்தம் அதிகரித்து வருவதால், மோதலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.
இந்த நடவடிக்கை விரைவில் முடிவடையக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் நிபுணர்கள் சபை மொஜ்தபா காமெனியை புதிய உச்ச தலைவராக அறிவித்தது.
ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் ஈரானுக்குள் சாத்தியமான தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தினர். ஆனால் ஈரானியப் படைகளுக்கு சவால் விடும் அளவுக்கு அவர்களிடம் போதுமான ஆயுத சக்தி இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |