கடந்த வருடம் இந்தியர்களுக்கு அமெரிக்கா அள்ளி கொடுத்த விசா
கடந்த வருடம் இந்தியர்களுக்காக, 14 லட்சம்(1.4 மில்லியன்) அமெரிக்க விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் 75 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவடைந்த காத்திருப்பு நேரம்
அதன்படி, விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம், சராசரியாக 1000 நாட்களாக இருந்த நிலையில், காத்திருப்பு நேரம் தற்போது 250 நாட்களாக குறைந்துள்ளதாகவும் அமெரிக்க விசா பெறுவதற்கு இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த 2022-ஆம் ஆண்டை காட்டிலும், கடந்த ஆண்டு 60 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்கா செல்வதற்கான விசா பெற விண்ணப்பிப்பவர்களில் பத்தில் ஒருவர் இந்தியராக உள்ளார் என அமெரிக்க தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பி1/பி2 பார்வையாளர் விசாக்கள் பெறுவதற்காக, பெறப்பட்ட விண்ணப்பங்கள், 7 லட்சத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்களுக்காக
எந்த நாட்டுக்கும் இல்லாத அளவாக, இந்திய மாணவர்களுக்காக கடந்த ஆண்டு 1,40,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |