உலகெங்கும் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, உலகெங்கிலும் குறிப்பாக மத்திய கிழக்கில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இராஜாங்கத் திணைக்களம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அமெரிக்கர்களும் தமக்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
விமான எல்லைகள் அவ்வப்போது மூடப்படலாம் என்பதுடன், மத்திய கிழக்குக்கு வெளியேயுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இராஜதந்திர வசதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Worldwide Caution: The Department of State advises Americans worldwide, and especially in the Middle East, to exercise increased caution. Americans abroad should follow the guidance in security alerts issued by the nearest U.S. embassy or consulate. Periodic airspace closures… pic.twitter.com/mX0ULIEzLv
— TravelGov (@TravelGov) March 22, 2026
மேலும், ஈரான் ஆதரவு குழுக்களினால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் அல்லது அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்கள் இலக்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் காரணங்களினால் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கோரி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு இந்த விசேட எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |