அமெரிக்க செனட்டரின் பேச்சால் பரபரப்பு! ஈரானில் தொடரும் பதற்றம்
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை அரசு வன்முறையால் அடக்க முயன்றால், கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்று அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்லவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயங்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உங்கள் நாட்டின் மக்களே சிறந்த வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையில், அவர்களை தொடர்ந்து கொன்று கொண்டிருந்தால், அதற்கு டொனால்ட் ட்ரம்பின் பதில் மிகக் கடுமையாக இருக்கும்” என்று கிரஹாம் கூறியுள்ளார்.
ஈரான் மக்களுக்கு உதவி
“தன் சொந்த மக்களைக் கொன்று, உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக விளங்கும் அயதுல்லா ஒரு தீவிர மதவாத ஆட்சியாளர்.

Image Credit: Axios
ஈரான் மக்களுக்கு உதவி வருகிறது; உங்கள் நாட்டை அயதுல்லாவின் பிடியிலிருந்து மீட்டெடுக்க நீங்கள் முன்வர வேண்டும்” என அவர் ஈரான் மக்களை நோக்கி மேலும் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய கிரஹாம், அந்நாட்டு ஜனாதிபதி மதுரோவை கைது செய்தது போலவே, ட்ரம்ப் வெறும் வார்த்தைகளில் மட்டுமே நின்றுவிட மாட்டார் என்பதை ஈரான் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஈரானின் எச்சரிக்கை
இந்நிலையில், டொலருக்கு எதிராக ஈரான் ரியாலின் மதிப்பு கடுமையாக சரிவடைந்ததன் காரணமாக, பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து கடந்த சில வாரங்களாக ஈரானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

Image Credit: Newsweek
இந்த போராட்டங்களில் இதுவரை 36-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், “ஈரான் அரசு அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தினால், அமெரிக்கா அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்” என பதிவிட்டிருந்தார்.
இந்த எச்சரிக்கைகளுக்கு பதிலளித்த ஈரான் ராணுவம், “அமெரிக்கா ஏதேனும் தவறான நடவடிக்கை எடுத்தால், எங்களின் பதில் மிகத் தீவிரமாக இருக்கும். ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களை நாங்கள் துண்டிப்போம்” என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 10 மணி நேரம் முன்