ஐ.நாவில் ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா
உக்ரைனில் (ukraine)இருந்து ரஷ்ய(russia) படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும் ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்கா(us) அதற்கு எதிராக வாக்களித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதற்றத்தைக் குறைக்கவும், போர் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறுத்தவும், உக்ரைனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.
தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவு
தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல்(israel) உள்ளிட்ட 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தியா(india) உட்பட 63 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதனிடையே போர் மூன்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில் மூன்றாம் ஆண்டு நிறைவடைந்த நாளான நேற்று(24), பல்வேறு உலக தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் குவிந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்