காசாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் அமெரிக்கா முக்கிய நகர்வு!
காசாவின் மேற்குகரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றமான ஏரியலுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எனினும் குறித்த விஜயமானது பாலஸ்தீன தரப்புக்களின் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு அவர் பாலஸ்தீனப் பகுதி யூத மக்களின் சரியான சொத்து என கூறிய கூற்று பலரது எதிர்ப்பை பெற்றுள்ளது.
பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம்
இது தொடர்பில் பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேற்குக் கரையை இணைப்பது குறித்த அறிக்கை பெரிதும் பாரதூரமான விடயமாகும்.
இது சர்வதேச சட்டம், சர்வதேச சட்டபூர்வமான தீர்மானங்கள் மற்றும் போரை நிறுத்தவும், வன்முறை சுழற்சியை நிறுத்தவும், அமைதியை அடையவும் அரபு மற்றும் அமெரிக்க முயற்சிகளை அப்பட்டமாக மீறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குடியேற்றக் குற்றங்கள், குடியேறிகளின் நடவடிக்கைகள் மற்றும் பாலஸ்தீனிய நிலங்களைப் பறிமுதல் செய்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சகம் இதைப் பார்க்கிறது.
இது குடியேற்றங்கள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு தெளிவாக முரணானது" என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
