சிரிய சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர் : டமஸ்கஸில் அலைந்து திரிந்த நிலையில் கண்டுபிடிப்பு
பஷார் அல்-அசாத்தின்((Bashar al-Assad)) ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கர் (us)ஒருவர் சிரிய(syria) தலைநகரில் அலைந்து திரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
ஆசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்த சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர். இவ்வாறு குறித்த அமெரிக்கர் சிறைவைக்கப்பட்ட அறைக்கு சென்ற கிளர்ச்சியாளர்கள் சுத்தியல் மூலம் சிறைக்கதவை உடைத்து விடுவித்ததாக அவர் தெரிவித்தார்.
அடையாளம் காட்டிய அமெரிக்கர்
தன்னை டிராவிஸ் டிம்மர்மேன்(30)(Travis Timmerman ) என்று பின்னர் அடையாளம் காட்டிய அந்த நபர் தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகில் வசிப்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஏழு மாதங்களுக்கு முன்பு சிரியாவிற்குள் நுழைந்தபோது தான் கைது செய்யப்பட்டதாக டிம்மர்மேன் கூறினார்.
சில நிமிட பயம் இருந்தது
ஹங்கேரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் கடைசியாக ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் காணப்பட்ட நிலையில், மே மாதம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
சிறையை விட்டு வெளியேறும் போது தனக்கு "சில நிமிட பயம் இருந்தது" என்று கூறிய அவர், தூங்குவதற்கு எங்காவது இடம் உள்ளதா என தான் அதிகம் கவலைப்பட்டதாகவும் கூறினார். எனினும் உள்ளூர் மக்கள் உணவு மற்றும் உதவிக்கான அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |