இலங்கையில் அமெரிக்க படை முகாம்! U.S ஏயார்போர்ஸ் விமானங்களும் தரிப்பு!
கரும்பு தின்னக் கைக்கூலியா என்ற வகையில் டித்வா பேரழிவுக்கு பின்னரான இலங்கையை மையப்படுத்திய நுட்பமான விடயங்கள் நடக்கின்றன.
இலங்கையில் நடந்த கடும் வெள்ளப்பாதிப்புகளுக்காக இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து தொடரும் நிலையில் தானும் தனது ஜேவிபி சகாக்களும் இனிமேல் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என அதன் தற்போதைய செயலாளரான ரில்வின் சில்வா தனது 71 வது வயதில் இந்தியா குறித்த ஞானத்தை வெளியிட்டுள்ளார்.
ரில்வின் தனது வாழ்நாளில் அதிக காலம் இந்திய எதிர்ப்பில் இருந்த நிலையில் இப்போது இந்திய உதவி ஆதாயங்களின் பின்னணியில் இந்த பிரதிபலிப்பு வந்துள்ளது.
இனிமேல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இலங்கை மீது தனது செய்மதிகளை திருப்பவுள்ள நிலையில் அண்மையில் சிறிலங்காவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை போட்ட அமெரிக்காவும் இப்போது தீவிரமாக களமிறங்கிவிட்டது.
அதன் U-130Tரக பெரிய சூப்பர் ஹெர்குலிஸ் சரக்குவிமானங்களில் இரண்டு கலங்கள் பசுபிக் தீவான குவாமில் இருந்து அமெரிக்க வான்படையின் 36 படையணியை சேர்ந்த துருப்புகளுடன் தரையிறங்கியுள்ளன.
இலங்கைமீதான இந்த ஒப்ரேசனுக்கு ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் உள்ள ஈருடகபடையணியான மரைன் கோர்ப்ஸ் அணியும் பங்களிப்பதால் இந்தியாபோல அமெரிக்கா இலங்கையில் சற்று அதிகமாக நேரத்துக்கு தனது இரண்டு சூப்பர் ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களை நிலைகொள்ளவைக்கும்;போலத் தெரிகிறது
தொழினுட்பரீதியில் பார்த்தால் குவாம் தளத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க வான்படை விமானங்களில் இரண்டு இனி மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் தரித்துநிற்பதற்கு தித்வா சூறாவளி வாய்பளித்துள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது இன்றைய செய்திவீச்சு ….