எல்-நினோவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
'எல்-நினோ' (El-Nino) காலநிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழைக்கால வானிலை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஓரளவு குறையும் என எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மழைவீழ்ச்சி குறைவு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கத்தைக் கருதினால், தென்மேற்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி குறைவதற்கு இந்த எல்-நினோ நிலைமை காரணமாக அமைகிறது.
எவ்வாறாயினும், எல்-நினோ தாக்கத்தினால் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சியில் ஓரளவு குறைவை நாம் எதிர்பார்க்கிறோம். ஏனெனில், தற்போது எல்-நினோ நிலைமை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

எனவே, எதிர்கால வானிலை அறிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேடமாக நினைவூட்டுகிறோம்.
அத்துடன், நிலவும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் வரும் நாட்களில் மழைவீழ்ச்சி குறைவடைவதோடு வெப்பநிலையும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |