ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடல்: அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த இறுதி உத்தரவு
அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை உத்தியோகபூர்வமாக ஏற்கும் வரை உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து மூடியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) திட்டவட்டமாக இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கலன்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டுமாயின் அமெரிக்கத் தரப்பு எங்களது நிபந்தனைகளை நிபந்தனையின்றி ஏற்க வேண்டும் என அராக்சி தெரிவித்துள்ளார்.
விவாதிக்கப்பட்ட விவகாரங்கள்
ஈரானினால் முன்வைக்கப்பட்ட ஏழு நாள் திட்டத்தின் (Seven-Day Plan) ஆறாம் நாளில் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு வாஷிங்டன் கொள்கை அளவில் உடன்பட்ட போதிலும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் மேலதிக நிபந்தனைகளைச் சேர்க்க அமெரிக்கா முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடன்பாடொன்று எட்டப்படும் வரை இயல்பாகவே ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடியே இருக்கும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |