ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்: 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பி 1 கப்பலை முடக்கியது அமெரிக்கா
ஈரானிய துறைமுகங்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான கடற்படை முற்றுகையின் (Blockade) போது ஒரு கப்பலை முடக்கியுள்ளதுடன் 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த பதிவில் ஜூலை 20 நிலவரப்படி, ஈரானிய துறைமுகங்களுக்குள் கப்பல்கள் நுழைவதையோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதையோ தடுப்பதற்காக, அமெரிக்க இராணுவம் 7 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதுடன் 1 கப்பலைச் செயலற்றதாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
U.S. service members aboard amphibious assault ship USS Boxer (LHD 4) support flight operations day and night from the Arabian Sea as CENTCOM enforces the naval blockade against Iran. As of July 20, the U.S. military has redirected 7 commercial vessels and disabled 1 to prevent… pic.twitter.com/a1gtwipPUf
— U.S. Central Command (@CENTCOM) July 20, 2026
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்