தனது நாட்டு விமானத்தையே சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!
செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை இன்றையதினம் (22.12.2024) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
F/A-18F என்ற போர் விமானமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதுடன் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |