அமெரிக்காவில் மீண்டும் சரமாரி துப்பாக்கி சூடு - சிதறி ஓடிய மக்கள்(காணொளி)
அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் வடக்கு கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பிட்ட சில காலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உணவகங்கள் , பாடசாலைகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடருகின்றன.
11 பேர் பலி
சம்பவம் தொடர்பாக உள்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கையில்,
கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அருகே சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
ஆசியர் நாட்டவர் அதிகம் வசிக்கக் கூடிய இந்த பகுதியில் சீனா புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன. இந்த கொண்டாட்டங்களின் போது திடீரென சரமாரி துப்பாக்கி சூடு சப்தம் கேட்டது.
இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 11 பேர் பலியாகினர்.
மர்ம நபர்கள்
?#BREAKING: Multiple People shot while Filming Music Video⁰⁰?#Oakland | #California⁰
— R A W S A L E R T S (@rawsalerts) January 24, 2023
Multiple police are on scene as 8 people have been shot, with at least one dead, while filming music video at gas station. Police say this is California's third mass shooting in three days pic.twitter.com/z3Qpy8Rekp
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய 72-வயது முதியவரும் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்றும் வடக்கு கலிபோர்னியா பகுதியில் மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
? BREAKING UPDATE: Hours ago California had multiple active shooting causing the whole city Half Moon Bay to go on locked down. The Suspect has been arrested. 67 year old Zhao Chunli is accused of murdering 7 people at Mushroom Farm and at a green house. pic.twitter.com/4yFsPuWjfy
— Joshua Rodriguez (@Joshuajered) January 24, 2023
இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் உயிரிழப்புகளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது

