டெல்ரா போர்ஸின் வெனிசுலா ஒப்ரேசன் நடந்தது எப்படி... ஜனவரி3 U.Sக்கு எதிரிகளை அழிக்கும் ராசியா..
பூகோள அரசியல் இன்னும் சில நாட்களுக்கு வெனிசுலா மீதான அமெரிக்காவின் Operation Absolute Resolve தான் முக்கியமாக பேசுபொருளாக இருக்கும்.
எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இனி அமெரிக்கவே இயக்கும் என அமெரிக்க அரசதலைவர் ட்ரம்ப் (Trump) அறிவித்திருப்பதால் வெனிசுலாவின் எண்ணெய்வளத்தை கைப்பற்றுவதே அமெரிக்காவின் நோக்கம் என்ற குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்படுகின்றன.
ட்ரம்ப்பின் இந்த நகர்வின் தாக்கம் உலக எண்ணெய் சந்தையை அடித்தால் சீனாவுக்கு எண்ணெய் போகும் வழி உட்பட்ட பரபரப்பு கடல்வழி விநியோக வழிக்கு அண்மையில் உள்ள இலங்கைக்கும் அது தாக்கமாக மாறக்கூடும்.
வெனிசுலாவில் ஒரு மாற்றம் வரும் வரை அந்த நாட்டை அமெரிக்கா நடத்தும் எனச் சொல்லியுள்ள ட்ரம்ப் வெனிசுலாவின் பதினாறு பெரிய எண்ணெய் வயல்களை அமெரிக்காவே கட்டுப்படுத்தும் என குறிப்பிட்டிருப்பது முக்கிய விடயம்.
ஆகமொத்தம் இப்போது வெனிசுலாவின் விதியை ட்ரம்ப் தீர்மானிக்கப்போவது ஏதோ ஒரு வழியில் இலங்கையையும் அசைக்ககூடும்.
ஐ.நா மனித உரிமை பேரவை போன்ற அரங்கங்களில் சிறிலங்காவுக்கு வெனிசுலா கடும் ஆதரவாக நின்று தமிழர்கள் மீதான படுகொலைகளை நிராகரித்தாலும் சிறிலங்கா அமெரிக்காவின் வெனிசுலா மீதான நடவடிக்கையை கண்டித்தால் அமெரிக்காவின் எதிர்வினை வரி உயர்வு உட்படட வழிகளில் வருமென்பது தெரியுமெனபதால் அது அடக்கிவாசிக்கும் டித்வா சூறாவளிக்கு பின்னர் இலங்கையில் அமெரிக்க படையினர் களமிறங்கி உதவிய நிலையில் வெனிசுலாவுக்காக வோசிங்ரனை கண்டிப்பது கொழும்புக்கு கடினமாகும் நிலையில் தமிழரசின் உள்ளூர் களம் முதல் உலக களம் வரை பரபரப்புகளை தொட்டு வருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |