ஐரோப்பாவுடன் இணைந்து இந்தியா செய்யும் காரியம்! அமெரிக்கா கடும் எதிர்ப்பு
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா இடையிலான புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடு எடுப்பதாக கூறும் ஐரோப்பா, நடைமுறையில் வர்த்தக நலன்களை முன்னிலைப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
போருக்கு மறைமுக உதவி
ரஷ்ய எண்ணெய் மீது தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெயை வாங்கியதாக கூறிய பெசென்ட், அந்த எண்ணெயை சுத்திகரித்து தயாரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் வாங்கியது ஐரோப்பா என பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: Bloomberg
இதன் மூலம், ஐரோப்பா தாங்கள் எதிர்க்கும் உக்ரைன் போருக்கே மறைமுகமாக நிதியளிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு வரி
மேலும், ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்கா இந்தியாவுக்கு 25% வரி விதித்தாலும், ஐரோப்பா அவ்வாறு செய்ய மறுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image Credit: Atlantic Council
எனவே இந்த மறுப்புக்கு காரணம், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்க விரும்பாத ஐரோப்பாவின் அணுகுமுறையே என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |