ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க அமெரிக்கா திட்டம்
ஈரான் அல்லது யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து அமெரிக்காவுக்குப் புதிய ஆத்திரமூட்டல்கள் எதுவும் ஏற்படாத பட்சத்தில், ஈரான் மீதான தாக்குதலைத் தள்ளிப்போடப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் ட்ரம்ப் தரப்புக்கு ஏற்பட்ட தோல்விக்கு மத்தியில் இது குறித்து அவர் தனது மூத்த ஆலோசகர்களிடம் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முழு அளவிலான போர்
தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றோம்.
மேலும், முழு அளவிலான போருக்குத் திரும்ப வேண்டாம் எனத் தன்னிடம் கோரிக்கை விடுத்த பிராந்திய நட்பு நாடுகளின் நிலைப்பாட்டிற்கு தனது அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றேன்.
தன்னால் இதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். ஆனால் நான் பாதுகாக்க விரும்பும் நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, நாங்கள் இதனைச் சற்று நீண்ட வழியிலும், இன்னும் கொஞ்சம் நாகரிகமான முறையிலும் கையாளுகின்றோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |