அமெரிக்கா மீண்டும் அணு ஆய்வில் கை வைத்தால்..! எச்சரிக்கும் ரஷ்யா
அமெரிக்கா மீண்டும் அணு ஆய்வுகளைத் தொடங்கினால், ரஷ்யாவும் தகுந்த முறையில் பதிலளிக்கும் என்று கிரெம்ளின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட அதிகாரிகள் அணு ஆய்வுகள் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்டு வரும் நிலையில் பெஸ்கோவின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அணு ஆய்வுத் தடை ஒப்பந்தம்
அத்தோடு, இது அமெரிக்காவின் அணு ஆய்வுத் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகும் அறிகுறியாக கருதப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி புடின் நவம்பர் 05 ஆம் விடுத்த உத்தரவு, அணு ஆய்வுகளுக்கான தயாரிப்புகளை தொடங்குவதற்கானதல்ல என்றும் பெஸ்கோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தயார் நிலையில் ரஷ்யா
இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்கி ஷோய்கூ மேலும் கூறுகையில், “ரஷ்யா பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நிபுணர்கள், தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால சாத்தியங்களை கருத்தில் கொண்டு பதில்கள் எடுக்கும் முன்மாதிரிகள் (modeling) செய்யத் தொடங்கியுள்ளனர்.

Image Credit: Reuters
ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் புதிய ஆயுதப் போட்டியை ஏற்பட விடமாட்டாது, ஆனால் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு எந்த மாற்றத்திற்கும் தயார் நிலையில் இருக்கிறது.” என்றார்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோவின் நடவடிக்கைகள் தீவிரமானதாக மாறியுள்ளதைக் கவனித்து ரஷ்யா தனது இராணுவத் திட்டங்களை அதன்படி சீரமைத்துக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
[VTGPKBS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |