சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: வெளியான காரணம்
United States of America
Pakistan
China
By Dilakshan
3 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழிநுட்பங்களை இரகசியமாக வழங்கியமைக்காக இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா பிரதானமாக ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகின்றது.
பொருளாதார தடை
இந்நிலையில், குறித்த நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அதன்படி, சீனாவைச் சேர்ந்த Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade மற்றும் Granpect Co. Ltd ஆகிய 3 நிறுவனங்களுக்கு எதிராகவே அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்