அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் நீரிணை - பாதுகாப்புத் துறைச் செயலாளர் அதிரடி அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையை தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய இராணுவத் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் இதனை குறிப்பிட்டார்.
ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது நூறு விகதிம் உண்மை என்பதை தற்போதைய கள நிலவரம் நிரூபிப்பதாகப் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
ஈரானின் கடுமையான எதிர்ப்பு
அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து வாரக் கணக்கில் இந்த பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை வெற்றிகரமாகக் கையாண்டு வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள ஈரான் மறுத்தாலும் இதுதான் தற்போதைய உண்மையான களநிலவரம் என்றும் அவர் திட்டவட்டமாகத் கூறினார்.

அத்துடன் இந்த வழித்தடத்தில் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய, அமெரிக்கா 'புராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற இரகசியப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் இதுவரை 100 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான மசகு எண்ணெய் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்
ஈரானின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்தை அமெரிக்கா தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளது.
அத்துடன் சுமார் 140 வணிகக் கப்பல்கள் இதுவரை அமெரிக்கப் படைகளால் வெற்றிகரமாக முடக்கப்பட்டதுடன், சர்வதேச தடைகளை மீறி ஈரானில் இருந்து வெளியேற முயன்ற ஒரு பெரிய மசகு எண்ணெய் பீப்பாய் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 19 மணி நேரம் முன்