ஈரானியக் கடற்படைக்கு பேரிடி: 30-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா
இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைத் தாங்கள் மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தலைவரும் (CENTCOM), மத்திய கட்டளைப் பீடத்தின் தலைவருமான அட்மிரல் பிராட் கூப்பர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படை
மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்ட இந்தக் கப்பல்களில், தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்த ஈரானிய ட்ரோன் கப்பல் ஒன்றும் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர் தொடங்கிய முதல் நாளை ஒப்பிடுகையில், தற்போது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் சுமார் 90 சதவீதத்தால் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தாக்குதல் வலுவை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் கணிசமாகக் கட்டுப்படுத்தியுள்ளதையே இது காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் இந்தத் தொடர் போர்ச் சூழல் காரணமாக சர்வதேசக் கடற்பரப்பில் கடும் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |