ரஷ்ய விவகாரத்தில் சீனாவை மிரட்டும் அமெரிக்கா!
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீனாவை அமெரிக்கா மிரட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன நிறுவனங்கள் ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் சேர விரும்பவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ (Gina Raimondo) தெரிவித்துள்ளார் .
தி நியூயோர்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
ஷாங்காயை தளமாகக் கொண்ட குறைக்கடத்தி உற்பத்தியாளர் SMIC போன்ற நிறுவனம் ரஷ்யாவிற்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதை வாஷிங்டன் கண்டறிந்தால் அதன் மீது தடைகள் விதிக்கப்படும்.
இது சிலிக்கன் சில்லுகளை (CHIPS) உற்பத்தி செய்யும் சீனாவின் திறனுக்கு இது பேரழிவு தரும் அடியாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் நடுநிலையில் இருந்து பின்வாங்குமாறு மேற்கு நாடுகள் சீனாவை வலியுறுத்தி வருகின்றன என முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கூறினார்.
இதற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரத் தலைவர் ஜோசப் பொரெல் , உக்ரேனில் போர் நிறுத்தத்தை அடைய பெய்ஜிங்கின் செல்வாக்கைப் பயன்படுத்துமாறு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறினார் .