அமெரிக்க வடபகுதியில் சீனாவின் உளவு பலூன் - வெடிக்கச் செய்வதில் சிக்கல்!
அமெரிக்காவின் வட பகுதியில் உளவு பார்க்கும் பலூன்கள் தென்படுவதாகக் கூறப்படுகின்றது.
மொன்ட்டானா (Montana) மாநிலத்தில் குறித்த பலூன்களைக் கண்டதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த பலூன்களை தற்போதைக்கு வெடிக்கச் செய்யவேண்டாம் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
சீனாவின் உளவு பலூன்

அமெரிக்காவை உளவு பார்ப்பதற்காக சீனாவால் குறித்த பலூன்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த உளவு பார்க்கும் பலூனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அமெரிக்கா இராணுவ தற்காப்பு அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாக சொல்லப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.