கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல்

Sumithiran
in பாதுகாப்புReport this article
அமெரிக்க(us) கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற போர்க்கப்பல் இன்று (நவம்பர் 16, 2024) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இவ்வாறு வந்த கப்பலை, இலங்கை கடற்படையினர்(sri lanka navy) கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.
துறைமுகத்தை விட்டு எப்போது புறப்படும்
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Arleigh Burke class guided missile detroer 'USS Michael Murphy' என்ற போர்க்கப்பலானது 155.2 மீட்டர் நீளமும், மொத்தம் 333 கடற்படையினரை கொண்டதுடன் கொமாண்டர் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் உள்ளார்.
மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Michael Murphy'கப்பல் நவம்பர் 17, 2024 அன்று கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட உள்ளது.
அண்மையில்தான் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்க்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



