புதிய எம்.பிக்களுக்கு நடைபெறப்போகும் விசேட செயலமர்வு
10வது நாடாளுமன்றத்திற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த செயலமர்வு நாடாளுமன்ற நடைமுறைகள், அமர்வு நடவடிக்கைகள் மற்றும் குழுக்களின் செயல்பாடுகள், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய அறிவை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று குலரத்ன கூறினார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கான பதிவு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கான பதிவு நவம்பர் 18, 19, 20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும்.
இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக குலரத்ன மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை நவம்பர் 18 முதல் 22 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |