அமெரிக்காவில் குரங்குகளுக்கான நகரம்!
அமெரிக்காவில் குரங்குகளுக்கான சிறிய நகரமொன்று உருவாக்கப்படவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம், ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30 ஆயிரம் குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒரு குட்டி நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இனப்பெருக்கம்
இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எனினும், மக்கள் மத்தியில் இந்த திட்டம் குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு
பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 14 ஆயிரம் மக்கள் வசிப்பதாகவும் இந்த நகரில் 30 ஆயிரம் குரங்குகளை வளர்ப்பது மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த திட்டத்தை உடனடியாக கைவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |