அமெரிக்க விமான நிலையமொன்றின் பெயர் ட்ரம்ப் விமானநிலையம் என மாற்றம்
அமெரிக்காவில் விமான நிலையமொன்றின் பெயரை ட்ரம்ப் விமான நிலையம் என மாற்றி அறிவிப்பு வெளியானதுடன் புளோரிடா ஆளுநர் ரான் டிசேன்டிஸ், இதற்கான சட்டமூலத்திற்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் மற்றும் தொழிலதிபரான எரிக் ட்ரம்ப் வெளியிட்ட செய்தியொன்றில்,
பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம், இனி ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

இதற்கான சட்டமூலம் ஒன்றிற்கு புளோரிடா ஆளுநர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புளோரிடா மாகாண பிரதிநிதி மேக் வெயின்பெர்கர், ஆளுநர் ரான் டிசேன்டிஸ், புளோரிடா சட்டமா அதிபர் ஜேம்ஸ் உத்மெயர் மற்றும் புளோரிடா அவையின் உறுப்பினர்களுக்கும் எரிக் ட்ரம்ப் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.
ஜூலை 1-ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்
ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்ற இந்த புதிய பெயர் மாற்றம் வரும் ஜூலை 1-ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது.

ஆனால், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெயர் மாற்றங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் அது உள்ளூர் விவகாரம் என்றும் தெரிவித்து உள்ளது.
எனினும், பயண அட்டவணை மற்றும் தகவல் தொகுப்புகளை மாற்றம் செய்வது உள்ளிட்ட சில நிர்வாக பணிகளை நாங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்