250 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றுள்ள மர்ம நபர்! தீவிரப்படுத்தப்படும் விசாரணை
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரி ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றசாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில், 2023 ஏப்ரல் மாதத்தில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு அளித்திருந்தார்.
அத்தோடு, அவரது முறைப்பாட்டை உடனடியாக விசாரிக்கக் கோரி பேராயர் மல்கம் ரஞ்சித் உட்பட பலரும் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
உத்தரவு
இதன்படி, குறித்த முறைப்பாடானது, கடந்த 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் மீண்டும் விசாரிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான உண்மைகளை 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேராயர் உட்பட பலரால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணையில், லஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினதும் முன்மொழிவுகள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)