காலைவேளை எழுந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி (காணொளி)
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், அட்கோனா என்ற சிறிய கிராமத்தில் வசிப்பவர்கள் காலையில் எழுந்தவேளை மிகுந்த ஆச்சரியத்துடனும் பீதியுடனும் இருந்ததாக இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.
ஒரு வீட்டின் சுவரில் ஒரு பெரிய புலி கிடந்ததைக் கண்டு கிராம மக்கள் ஆச்சரியமும் பீதியும் அடைந்தனர். பின்னர், நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் புலி புகுந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
எந்த தொந்தரவும் செய்யாமல்
இதுவும் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஆனால், புலி எந்த தொந்தரவும் செய்யாமல் சுவரில் படுத்திருந்ததால், வீட்டைச் சுற்றி பெரியவர்கள், சிறியவர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.
சம்பவத்த்தை கேள்விப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகள் குழுவும் அங்கு சென்றடைந்துள்ளது. இது பிலிபிட் மாவட்டத்தில் உள்ள அட்கோனா கிராமத்திற்கு அருகில் உள்ள புலிகள் காப்பகத்தை சேர்ந்த புலி
08 மாத குழந்தையுடன் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்
மயக்க மருந்து செலுத்திய பிறகு
பின்னர் வனவிலங்கு அதிகாரிகள், இரண்டு வயதுடைய புலி எனத் தெரிவித்தனர். மயக்க மருந்து செலுத்திய பிறகு, காயங்களுக்கு சிகிச்சை அளித்து, வனவிலங்கு அதிகாரிகள் புலியை காப்பகத்தில் விட நடவடிக்கை எடுத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |