ஊவா மாகாண சபையின் உதவி விவசாயப் பணிப்பாளர் கைது
ஊவா மாகாண சபையின் (Uva Provincial Council) உதவி விவசாயப் பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச நிலத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துதல் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஒரு பெரிய மோசடி தொடர்பாகவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹல்துமுல்ல பகுதியிலுள்ள அரச காணியை கையகப்படுத்தி, அங்கு நடுவதாகக் கூறி 4000 மாங்கன்றுகளை அரச நிதியில் கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றப் புலனாய்வுத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அத்துடன் குறித்த திட்டத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், சந்தேகநபர்களை இன்று (03) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
